கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கு, கோவை மாநகராட்சியில் தண்ணீர் திறந்துவிடும் கணேசன் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை அளித்துள்ளார். கடந்த 10ஆம் தேதி கணேசன், குனியமுத்தூர் பகுதியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளார்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மின்மோட்டாரை ஆன் செய்ய கீழே வந்தபோது, மதுபோதையில் இருந்த கணேசன் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த இளம்பெண் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தண்ணீர் திறந்துவிடும் வேலையைச் செய்ய வேண்டிய அரசு ஊழியரான கணேசன், வேலை நேரத்தில் மதுபோதையில் இருந்ததும் இளம் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதையும் கோவை மக்கள் கடுமையாகக் கண்டித்துவருகிறார்கள்.