திருச்சியில் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. நவீன மருத்துவ உபகரணங்கள், ஸ்கேன் கருவிகள் என அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது. அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளும் இங்கு வெற்றிகரமாக நடந்து வருகிறது.
இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி டீனாக இருப்பவர் டாக்டர் சாரதா. இவர் நேற்று முன்தினம் இங்கு பணியில் இருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை பணியில் இருந்த டாக்டர்கள் சோதித்தனர். இதைத் தொடர்ந்து டீன் சாரதா உடனடியாக திருச்சியில் உள்ள காவிரி மருத்துவமனையில் தன்னை உள்நோயாளியாக சேர்க்கும்படி கூற, அதன்படி காவிரி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது வரை அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கல், சர்க்கரை அதிகமானதால் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவனையில் சிறப்பு மருத்துவ பயிற்சி முடித்த பல மருத்துவர்கள் இருக்கும் நிலையில் டீன் காவிரி மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறுவது அரசு மருத்துவர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு கோடி கோடியாக செலவு செய்து இயங்கி வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்கிற பெயர் வைத்திருந்தாலும் அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலி பிரச்சனைக்கு ஊசி போட்டு இரத்தத்தை கரைக்கிற 15 வருடத்திற்கு முன்பு இருந்த ஊசிபோடும் முறை மட்டுமே தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது. இந்த 100 கோடியில் உள்ள ஸ்மார்ட் மருத்துவமனை பரிதாபநிலையில் உள்ளது. அதற்கு அடுத்து அடிப்படையாக உள்ள ஆஞ்சிகிராம் எடுப்பது, அதற்கு அடுத்து ஆஞ்சியோ பிளாஸ்ட், ஆஞ்சியோவில் இரத்தகுழாய் புதிதாக வைப்பது, அதற்கு அடுத்து இருதய அறுவை சிகிச்சை, இவை எல்லாம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இவை அனைத்தும் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. திருச்சி அரசு மருத்துவமனை என்பது தனியார் மருத்துவனைக்கு ஏஜெண்ட் போல் தான் செயல்படுகிறது.