Published on 04/05/2018 | Edited on 04/05/2018
சேலம் ஆத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இடியுடன் பெய்த கனமழையால் வசிஷ்ட நதியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பருக்கு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் சின்ன கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து உருவாகும் கல்லாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் கல்லாற்றின் இணைவு நதியான வசிஷ்ட நதியிலும் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் பதினைந்து வருடங்களுக்கு பிறகு வசிஷ்ட நதியில் நீர் வெள்ளபெருக்குடன் ஆர்ப்பரித்து ஓடியதை அப்பகுதி மக்கள் பெரும் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.