Skip to main content

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர் கூட்டமைப்பினர்! (படங்கள்)

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

கரோனா தடுப்பூசியால் கிராம சுகாதார செவிலியர்களின் முக்கியத்துவத்தினையும், பங்களிப்பினையும் உணர்ந்துள்ளோம். இருப்பினும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் கிராம சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர், சமுதாய நல செவிலியர் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள் குறித்தும், இதற்கான தீர்வுகள் மற்றும் கோரிக்கைகள் குறித்தும், துணை சுகாதார நிலையங்களில் (staff nurse) நியமனம் குறித்தும் நேரிடையாக முறையீடு செய்துள்ளனர். இதனை தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் பொது சுகாதாரத்துறை செவிலியர் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் இன்று (21.09.2021) காலை பொது சுகாதாரத்துறை இயக்குநரை சந்தித்து பெருந்திரளாக முறையீடு செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்