Published on 17/11/2018 | Edited on 17/11/2018

தலைக்கேறிய மதுபோதையில் ரோட்டில் விழுந்துகிடந்த தந்தையை 2 வயது மதிக்கத்தக்க சிறுமி எழுப்ப முயற்சித்து போராடிய வீடியோ தற்போது இணையத்தில் காண்போரை இப்படி ஒரு குழந்தைக்கு இப்படிஒரு தந்தையா என விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.
கூப்லி பகுதியில் ஒருவர் தனது இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையுடன் அதேபகுதியில் பிச்சை எடுத்துள்ளார். இப்படி பிச்சை எடுத்த பணத்தில் மது வாங்கி குடித்துவிட்டு தந்தை சென்னம்மாசிலை என்ற இடத்தில் தலைக்கேறிய போதையில் மயங்கிவிழ, ஏதுமறியா அந்த பிஞ்சு குழந்தை தன் தந்தையை எழுப்பும்பொருட்டு மயங்கி கிடந்த அவரை அடித்து ''எழுந்திரு எழுந்திரு அப்பா'' எனா சுமார் ஒரு மணிநேரம் போராடியது. இந்த காட்சியை அங்கெ சென்ற பாதசாரி ஒருவர் வீடியோ எடுக்க அது தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.