Published on 21/07/2018 | Edited on 21/07/2018
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சித்திரை வேல் என்ற விவசாயி கலந்து கொண்டார். தானே புயல் பாதிப்பின்போது நிவாரணம் கிடைக்காத மக்களுக்காக தொடர்ந்து போராடியவர் இவர்.
இந்த நிலையில் இவரது விவசாய மின் இணைப்பு மற்றும் செங்கல் சூளைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுத்துள்ளார். இருப்பினும் அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றபோது, மாத்திரையை அதிக அளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அங்கிருந்தவலர்கள் கவனித்ததால் உடனடியாக அங்கிருந்தவர்கள் சித்திரைவேலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.