கடலூர் அருகே மருத்துவ கழிவுகள் அழிக்கும் தொழிற்சாலை கண்டித்து சாலை மறியல்
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்துள்ள டி.புடையூர் அருகே மருத்துவ கழிவுகள் அழிக்கும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஒரு சிலர் மீது தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர வேப்பூர் காவல் துறையினர் முயற்சி செய்தனர்.
இதை அறிந்த கிராம பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் வேப்பூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு இன்ஸ்பெக்டர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் சமரசம் ஏற்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்L னர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சுந்தரபாண்டியன்