
ஒவ்வொவொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை சார்பாக புத்தக திருவிழா ஈரோட்டில் நடப்பது வழக்கம். இவ்வருட திருவிழா இன்று 3 ந் தேதி தொடங்குகிறது. இந்த புத்தக திருவிழாவை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை மற்றும் அரசு செயலர் த.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். இன்று முதல் 14. 8. 18 வரை 12 நாட்கள் இந்த புத்தக திருவிழா நடக்கும்.
இதில் தமிழகத்தின் முன்னணி பதிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு அவர்களின் பதிப்பக புத்தகங்களை விற்பனைக்காக அரங்குகளில் வைத்துள்ளார்கள். மொத்தம் 236 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு முன்னனி எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், திரைப்பட கலைஞர்கள், இலக்கியவாதிகள் கலந்து கொள்ளும் இலக்கிய விழாக்களும் நடக்கிறது. சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோடு புத்தக திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடத்தி வருகிறது தோழர் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமையிலான ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை.