Skip to main content

கல்வி வளர்ச்சி நாள்: புத்தகங்களை வழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 14/07/2023 | Edited on 14/07/2023

 

Educational Development Day Chief Minister M. Stalin will distribute the books

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சம் அறிவார்ந்த புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும் புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும் அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே வழங்கியுள்ளார்.

 

இந்நிலையில் சென்னை நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளான கல்வி வளர்ச்சி நாளில் (15.07.2023) நடைபெறவுள்ள விழாவில்,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபகாலங்களில் தனக்கு வழங்கப்பெற்ற 7,740 புத்தகங்களை தமிழ்நாடு அரசின் பொது நூலகங்களுக்கு வழங்குகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்