Published on 26/06/2019 | Edited on 26/06/2019
ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க தடைக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் உயர்மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. 11 விவசாயிகள் தொடர்ந்த இந்த வழக்கை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.