Published on 02/05/2020 | Edited on 02/05/2020

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என். பால் வசந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இது எனது தாழ்மையான கோரிக்கையாகும். இதன் மூலமாக, தமிழகத்திற்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டாலும், இந்த இழப்பை ஈடுகட்ட, தமிழக அரசு சொத்து வரியை உயர்த்துவதன் மூலமும் பத்திரப் பதிவுக் கட்டணத்தை உயர்த்துவதன் மூலமும், இந்தத் தொகையை தமிழகஅரசு வசூலித்துக் கொள்ளலாம். இதனை நடைமுறைப்படுத்தினால், ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் பாதிக்கப்படாமல் இருப்பார்கள். குடிபோதையில் ஏற்படும் விபத்துகளையும், விபத்துகளினால் ஏற்படும் உயிர் பலியையும் கூட தடுத்துவிட முடியும்.” என்று கூறியுள்ளார்.