கரோனா கட்டுபாடுகள் என்பது நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற தான். அதற்காகதான் அரசும் பல்வேறு கட்டுபாடுகளை பொதுமக்களுக்கும், வணிகம் சார்ந்தவா்களுக்கும் பிறப்பித்துள்ளது. ஆனால் திருச்சியில் இயங்கிவரும் பிரபலமான துணிக்கடையான சாரதாஸ் நிறுவனம் தன்னுடைய ஊழியா்களை தினமும் காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பணிக்கு வரவழைத்து கொண்டிருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
அதிகமான தொழிலாளா்கள் பணியாற்றும் கடையில் கரோனா நோய் தொற்று ஏற்படுவதால் அரசு வணிக நிறுவனங்களை தற்காலிகமாக மூட உத்தரவிட்டது. பொதுமக்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தற்போது ஊழியா்கள் தொடர்ந்து பணிக்கு செல்கின்றனர். நிர்வாகமும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்பதற்காக ஊழியர்களை வரவழைத்து தூய்மை செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வெளியே பல்வேறு இடங்களில் இருந்து தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று கூடும் போது கரோனா நோய் தொற்று ஏற்படாதா என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது?.
மாநாகராட்சி நிர்வாகமும் இதை கண்டுகொள்ளாமல் தொழிலாளா்களை அனுமதித்து வருகின்றனர். ஒரே இடத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கூடுவதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அரசு உடனடியாக தலையிட்டு ஊரடங்கு என்பதை முறையாகவும், கட்டுபாட்டுடனும் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நிர்வாகம் ஊழியர்களுக்கு இந்த கரோனா காலங்களில் அவர்களுக்கான மாத ஊதியத்தை எந்தவித எதிர்பார்ப்புமின்றி வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.