Skip to main content

முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை!

Published on 22/05/2021 | Edited on 22/05/2021

 

coronavirus lockdown extend two weeks doctors expert team recommend

 

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாளுடன் (24/05/2021) முடிவடைய உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரப்தீப் கவுர், அருண்குமார் உள்ளிட்ட 19 பேர் அடங்கிய மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று (22/05/2021) காலை 10.00 மணிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

 

இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பல்வேறு துறை சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் இரண்டு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. கரோனா பரவலை மேலும் தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்காக அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்