சங்கரன்கோவில் தனியார் திருமண மஹாலில் நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில், விரைவில் நகர்ப்புற பகுதிகளுக்கு நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து திமுக செயல்வீரர்கள் கூட்டம் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா முன்னாள் அமைச்சர் தங்கவேல், திமுக நகரச் செயலாளர் சங்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துசெல்வி உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
''விருப்பு வெறுப்புகளைத் தள்ளிவைத்து நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலை 100 சதவீதம் திமுக கைப்பற்றியுள்ளது. அதேபோல் வரும் நகர மன்றத் தேர்தலில் 100% திமுக கைப்பற்ற வேண்டும். கட்சியில் புதிதாகச் சேர்ந்துள்ள ஒருவருக்கு வார்டுகளில் ஏதாவது ஒரு பொறுப்பு கொடுக்க வேண்டும். அப்படிப் பொறுப்பு கொடுக்கும் பொழுது யாருக்கும் விருப்பு வெறுப்புகள் இருக்கக்கூடாது. அவர்களை அனுசரித்துக் கொள்ளவேண்டும். அடுத்து கூட்டுறவு தேர்தலும் வருகின்றது. அதில் கட்சிக்கு உழைத்த திமுகவினர் மற்றும் புதிதாக வந்தவர்களுக்கும் பொறுப்பு கொடுக்கப்படும்'' என்று அழுத்தமாகப் பேசினார் மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபன்.