Skip to main content

'நீட் தேர்வை எதிர்ப்பது உண்மை எனில் அ.தி.மு.கவும் நீதிமன்றத்தை நாடவேண்டும்'- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்! 

Published on 26/08/2020 | Edited on 26/08/2020

 

DMK STALIN

 

கரோனா காலத்தில் நீட், ஜெ.இ.இ தேர்வுகளை தற்பொழுது நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர பஞ்சாப், ராஜஸ்தான், சதீஷ்கர், புதுச்சேரி, மேற்கு வங்கம் என மொத்தம் 7 மாநிலங்கள் முடிவு செய்துள்ளது. சோனியாவுடனான ஆலோசனைக்குப் பின் ஜார்கண்ட், மகாராஷ்டிர மாநில அரசுகளும் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளது.

அதேபோல்  நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க அரசும் நீதிமன்றத்தை நாட வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் அரசு நீட் தேர்வை எதிர்ப்பது உண்மை எனில் அந்த 7 மாநிலங்களைப் போல அ.தி.மு.க அரசும் நீதிமன்றத்தை நாட வேண்டும்.  நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் 7 மாநில முதலமைச்சர்களை மனமார பாராட்டுகிறேன், வணங்குகிறேன். தேர்வு மூலம் துன்புறுத்தப்படுவதை ஒத்திவைக்க நீட்தேர்வு தொடக்கமாக அமையட்டும் எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்