தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடிக்கு இன்று (11.11.2020) சென்றார். தூத்துக்குடிக்கு வருகை தந்த முதல்வர் பழனிசாமிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், நேற்று இரவு ஒட்டப்பட்ட போஸ்டர்கள், மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தி.மு.க.வினர் ஒட்டிய போஸ்டர்களில் இருந்த வாசகங்கள் அ.தி.மு.க.வினரை கோபமடைய வைத்தது. போஸ்டர் விவகாரத்தை, எடப்பாடி கவனத்துக்குக் கொண்டு சென்றனர் அ.தி.மு.க.வினர். போஸ்டரில் இருந்த வாசகங்கள் எடப்பாடியையும் டென்ஷனாக்கியது. இதனையடுத்து அந்த போஸ்டர்களை கிழித்தெறிய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்தச் செய்தியை நேற்று நக்கீரன் இணையதளத்தில் பதிவு செய்திருந்தோம். அதேபோல, நேற்று நள்ளிரவில் அந்த போஸ்டர்களை கிழித்தெறிந்திருக்கிறது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை. மேலும், போஸ்டர் ஒட்டிய சிலரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து கடுமையாக எச்சரித்திருக்கிறது போலீஸ்.
https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/posters-against-edappadi-thoothukudi