தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ, கொமதேக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்து தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதி செய்துள்ளது.
கூட்டணிக் கட்சிகளுக்கு இதுவரை 60 தொகுதிகளை திமுக தரப்பு ஒதுக்கியுள்ளது. இதில் மதிமுக, கொமதேக உள்ளிட்ட சில கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளன. திமுக தனியாக 174 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மொத்தம் 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட உள்ளன.