Skip to main content

8 ஆண்டுகளுக்கு பிறகு சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய திமுக!

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

சின்னமனூர் திமுக கவுன்சிலர் திரும்பியதால் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மூன்றாவது முறையாக நடந்த மறைமுகத் தேர்தலில் எட்டு ஆண்டிற்கு பிறகு போட்டியின்றி  திமுக கைப்பற்றியது. அதிமுக உறுப்பினர்கள் புறக்கணிப்பு பாதுகாப்பிற்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

 

DMK captures Chinnamanur panchayat union

 



தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 14 கிராம ஊராட்சி உள்ளது. இங்கு 10 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். கடந்த டிசம்பர் 30ல்  நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சின்னமனூர் ஊராட்சி 10 ஒன்றிய கவுன்சிலர்களில்  திமுக 6 இடங்களையும், அதிமுக 4 இடங்களையும் பிடித்தது பத்து ஒன்றிய கவுன்சிலர்கள் ஜனவரி 6ஆம் தேதி பொறுப்பேற்றனர்.

தலைவர் துணைத்தலைவர் மறைமுகத் தேர்தலுக்கு யாரும் ஒத்துழைப்பு தராததால் ஜனவரி 11ஆம் தேதி ஒத்தி தேர்தல் வைக்கப்பட்டது. இதற்கிடையில் பொட்டிபுரம் 1 வது வார்டு திமுக உறுப்பினர் ஜெயந்தியை அதிமுகவினர் கடத்திச் சென்று அதிமுகவில் சேர்த்தனர். இதனால் திமுக 5 உறுப்பினர்களையும், அதிமுக 5 உறுப்பினர்களை கொண்டு சமநிலை அடைந்ததால் மறைமுக தேர்தல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

அதனடிப்படையில் கடந்த 11 ஆம் தேதி நடந்த மறைமுக தேர்தலுக்கு சமநிலையாக இருந்ததால் திமுக அதிமுக கவுன்சிலர்கள் யாரும் வருகை புரியாததால் மறுபடியும்  30 ஆம் தேதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அந்த 30ஆம் தேதியிலும் உறுப்பினர்கள் யாரும் வருகை தராததால் மறு தேதி குறிப்பிடாமல் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

 



அதன்படி மாநில தேர்தல் கமிஷன் கடந்த 4ஆம் தேதி மறைமுக தேர்தலை அறிவித்தது. அதைத்தொடர்ந்து சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக கவுன்சிலர்கள் 6 பேர் வருகை புரிந்தனர். ஆனால் அதிமுக நான்கு ஒன்றிய கவுன்சிலர்கள் புறக்கணித்து விட்டனர். அதனால் போட்டியின்றி சின்ன பொருளாதாரம் நான்காவது வார்டு உறுப்பினர் நிவேதாவை தலைவராகத் தேர்வு செய்தனர். அதன் பின் நடந்த துணைத்தலைவர் தேர்தலிலும் அதிமுக புறக்கணித்ததால் பொட்டிபுரம் முதல் வார்டு கவுன்சிலர் ஜெயந்தியை துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்தனர்.

இந்த தேர்தலை மாவட்ட பதிவாளர் ஜெயபிரகாஷ் ஸ்பெஷல் டிஆர்ஓ தியாகராஜன் மற்றும் தேர்தல் அலுவலர் சரவணன் ஆகியோர் நடத்தினார்கள். இந்தநிலையில் அதிமுகவில் சேர்ந்த ஜெயந்தி போலீஸ் பாதுகாப்புடன் பொட்டிபுரத்தில் தனது வீட்டில் சிறையில் இருந்தார். இதற்கிடையில் பொட்டிபுரம் கிராம மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டியும் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய் என கண்டனம் தெரிவித்ததால் ஜெயந்தி கிராம மக்களுக்கு தலைவணங்கி மதிப்பளிக்கும் வகையில் அதிமுகவிலிருந்து விலகி மறுபடியும் திமுகவில் சேர்ந்தார். சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தை எட்டு ஆண்டுகள் கழித்து திமுக கைப்பற்றியுள்ளது. இப்படி திமுகவிலிருந்து அதிமுகவுக்கு தாவியா ஜெயந்தி மீண்டும் திமுகவுக்கு வந்ததின் மூலம் சின்னமனூர் ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்