நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் தேமுதிகவும் தனது தேர்தல் வேலைகளை தற்போது தொடங்கியுள்ளது. வரும் ஏழு அல்லது எட்டாம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் அண்மையில் காலமானதைத் தொடர்ந்து தேமுதிக கட்சியில் இருந்து தேர்தல் தொடர்பான எந்த அறிவிப்புகளும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் மாவட்டச் செயலாளர்களை ஆலோசித்து அதன் பிறகு கூட்டணி குறித்து முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது. தேர்தல் பொறுப்பாளர்கள், பணிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பணிகளை தேமுதிக தொடங்க இருக்கிறது.
அதிமுக மற்றும் பாஜக சார்பில் ஏற்கனவே நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகின்றன.