சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 88வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். தி.க. செல்வரத்தினம், அறிமுக உரையாற்றினார். இதில் மாவட்ட தலைவர் இளங்கோவன், தலைமை கழக பேச்சாளர் யாழ்திலீபன் ஆகியோர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய வாழ்வியல் சிந்தனைகள், மற்றும் ஒப்பற்ற தலைமை, பேராசிரியர் அருணன் எழுதிய ஒரு மார்க்கிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம் என்ற மூன்று நூல்களை வெளியிட்டனர்.
இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்தார்த்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பால.அறவாழி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைப்பாளர் ம.தி.மு.க. டிங்கர் குமார், நகர செயலாளர் இராஜராஜன், த.வா.க. நகர செயலாளர் தில்லைநாயகம், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷாஜகான், மார்.கம்யூனிஸ்ட் நகர செயலாளர் ராஜா, பகுத்தறிவாளர் கழக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கலைச்செல்வம், ஆசிரியர் செங்குட்டுவன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சட்ட எரிப்பு வீரர் 93 வயது நமச்சுவாயம் அவர்களுக்கு சால்வை அனிவித்து மரியாதை செய்யப்பட்டது. தி.கஇளைஞரணி மகேஷ் நன்றியுரை வழங்கினார்.