தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே தேனி சாலையில், தேனி பி.சி.பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன், தனது மனைவி ராஜலட்சுமியுடன் பெரியகுளம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, கைலாசபட்டி பகுதியில் கம்பத்திலிருந்து பெரியகுளம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, இருசக்கர வாகனத்தை முந்திச்செல்ல முயன்றுள்ளது. அப்போது, முன்னே சென்ற இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன், மனைவி கீழே விழுந்தனர். ஜெயராமனின் மனைவி ராஜலட்சுமி பேருந்தின் சக்கரத்தில் சிக்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலே பலியானர்.
இதில் ஜெயராமன் தலைக்கவசம் அணிந்திருந்ததால் காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து ஏற்படுத்திய அரசுப் பேருந்தின் ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து பெரிய குளம், தென்கரை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
தென்கரை காவல்துறையினர், விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கணவன் கண்முன்னே மனைவி பேருந்து சக்கரத்தில் சிக்கிப் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.