Skip to main content

அமைச்சர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலி!

Published on 21/09/2017 | Edited on 21/09/2017
அமைச்சர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலி!



புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் கிழக்கு கிராத்தைத் சேர்ந்தவர் விவசாயி  தமிழ்மாறன். இவரது மனைவி நாகராணி. இவர்களின் குழந்தை காயத்ரிக்கு(4) கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் இவருக்கு கீரமங்கலம், அரசர்குளம் போன்ற இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால், காய்ச்சல் குறையாததால் கடந்த திங்கள் கிழமை கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைத்திற்கு குழந்தையைக் கொண்டுசென்றபோது, அங்கு எடுக்கப்பட்ட சோதனையில் ரத்தத்தில் அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அமெரிக்கன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காயதிரி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

அதே போல அறந்தாங்கி அருகில் உள்ள விஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்(35) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இன்று பரிதாபமாக உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு ஊசி மருந்து இல்லை என்று எழுதி ஒட்டப்பட்ட நிலையில் மாத்திரைகள் மட்டும் வழங்கப்படுகிறது.

- இரா.பகத்சிங்    

சார்ந்த செய்திகள்