Skip to main content

அமைச்சர் சி.வி.சண்முகம் கொடும்பாவி எரிப்பு!

Published on 30/04/2018 | Edited on 30/04/2018


 

cvsanmugam


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் நேற்று கடலூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 
 

அதிமுக பொது கூட்டத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். திமுக தலைவர் கலைஞர் மற்றும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை விமசித்து பேசியதற்கு கண்டனம் தெரிவித்து கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சி.வி.சண்முகம் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடைபெற்றது.

   
கடலூர் நகர செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமையில் தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி முன்னிலையில் கடலூர் பாரதி சாலையில் சி.வி.சண்முகம் கொடும்பாவி எரித்த திமுகவினர் கண்டன முழுக்கங்கள் எழுப்பினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

சி.வி. சண்முகம் உடல்நிலை குறித்து அப்பல்லோ தகவல்

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

 Apollo report on CV Shanmugam body condition

 

அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. சண்முகம் நேற்று அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய சிகிச்சை தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.  அண்மையில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

 

இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகவில்லை. வழக்கமான ரெகுலர் செக்கப்பிற்காக மட்டுமே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் என சி.வி. சண்முகம் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

Next Story

மேடையில் கோரிக்கை வைத்த சி.வி.எஸ்... அடுத்த பொதுக்குழு தேதி அறிவிப்பு

Published on 23/06/2022 | Edited on 23/06/2022

 

CVS requested on stage ... Announcement of the next General Body Date


அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் அமைந்திருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை வேண்டும் என தொண்டர்கள் கூச்சலிட்டனர். அதன்பிறகு ஓபிஎஸ்- இபிஎஸ் மேடைக்கு வர, பொதுக்குழு துவங்கியது. இதுவரை அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன் அதிமுகவின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

 

ADMK

 

அதனைத் தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கை கடிதம் ஒன்றை சி.வி.சண்முகம் மேடையில் வாசித்தார். அதில், ''இன்று நடைபெறும் பொதுக்குழுவில் 2,190 பொதுக்குழு உறுப்பினர்களால் கையொப்பமிட்டு கொடுக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கை குறித்து விவாதிக்கக் கோரிக்கை வைக்கிறோம். அதிமுகவில் இரட்டை தலைமையால் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள், சங்கடங்கள், நிர்வாக சிக்கல்கள் குறித்து விவாதிக்க வேண்டும். இரட்டை தலைமையால் திமுகவை எதிர்த்து வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்பட முடியாத சூழல் இருக்கிறது .இது தொண்டர்கள், நிர்வாகிகள், மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை தலைமையின் முரண்பாடான, தெளிவில்லாத செயல்பாட்டால் தொண்டர்களிடையே சோர்வு ஏற்பட்டுள்ளது. எனவே ஒன்றைத் தலைமை தொடர்பாக விவாதித்து முடிவு செய்ய வேண்டும். அதற்காக இந்த பொதுக்குழுவிலேயே அடுத்த பொதுக்குழுவிற்கான தேதியை அதைத் தலைவர் அறிவிக்க வேண்டும்'' என்றார்.

 

அதன்பின் கோரிக்கை மனுவை சி.வி.சண்முகம் அவைத்தலைவரிடம் கொடுக்க, அடுத்த மாதம் ஜூலை 11 ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என  அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.