Published on 24/04/2020 | Edited on 24/04/2020
கடலூர் மாவட்டத்தில் கரோனா தீவிர நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்டம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (26.04.2020) ஒரு நாள் முழுமையான ஊரடங்கைக் கடைப்பிடிக்க மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அன்றைய தினம் மருந்துக் கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்படும் எனவும், இதனை மீறி நடப்பவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் கொள்ளை நோய்த் தடுப்பு சட்டங்களின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.