ஈரோட்டில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நடக்கும் மாட்டுச் சந்தை மாநில அளவில் முதன்மையானதாக இருக்கிற நிலையால் மழையால் கால்நடை வியாபாரம் சரித்துள்ளதாக அப்பகுதி மாட்டு வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில்தான் இந்த மாட்டு சந்தை வாரந்தோறும் புதன் இரவு மற்றும் வியாழக்கிழமை மதியம் வரை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், திண்டுக்கல், கோவை, கரூர், திருச்சி, திண்டுக்கல் என பல மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளை இங்கு விற்பனைக்கு கொண்டு வருவார்கள். மாடுகளை வாங்க தமிழகம் மட்டும் அல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து விலைபேசி வாங்கி செல்வார்கள்.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், இன்று கூடிய சந்தையில் மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. மேலும், கேரளா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அம்மாநில வியாபாரிகளும் குறைந்தளவே மாடுகளை வாங்க வந்தனர். இதன்காரணமாக விற்பனையும் மந்தமாகவே இருந்தது.
இதுகுறித்து கருங்கல்பாளையம் மாட்டு சந்தை வியாபாரிகள் கூறும் போது, இந்த வார சந்தையில் மழையின் காரணமாக குறைந்தளவே மாடுகள் விற்பனைக்கு வந்தது. மேலும் கேரளா, கர்நாடாக மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் அம்மாநில வியாபாரிகளும் பெருமளவில் வரவில்லை. இதனால் விற்பனையும் குறைந்து காணப்பட்டது. இன்று நடைபெற்ற சந்தையில் 300 பசு மாடுகள், 200 எருமைகள், 150 வளர்ப்புக் கன்றுகள் என 650 மாடுகள் மட்டும் தான் விற்பனைக்கு வந்தன, இதில் பாதி அளவு மாடுகளே விற்பனையாகியது என்றனர்.
கனமழை தொடங்கிவிட்டால் மாடு விற்பனை மேலும் குறைந்த அளவிலேயே நடக்கும் சுமார் பத்து கோடி வரை வியாபாரம் நடக்கும் இந்த மாட்டுச் சந்தை தற்போது மழையால் டல் ஆனது.