Skip to main content

அ.தி.மு.க. அலுவலகத்தில் கலைஞருக்கு மவுன அஞ்சலி: ஆறுகுட்டி எம்.எல்.ஏ. பேட்டி

Published on 10/08/2018 | Edited on 10/08/2018
kalaignar

 

 

 


கோவை மாவட்டம் கள்ளிமடையில் அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி அலுவலகத்தில் வைத்து, திமுக தலைவர் கலைஞர் உருவப்படம் உள்ள அஞ்சலி போஸ்டருக்கு மாலை அணிவித்து, கருப்பு சட்டை அணிந்து இரங்கல் தெரிவித்தனர். பின்னர் மவுன அஞ்சலி செலுத்தி உள்ளனர். 

 

arukutty


 

இதுகுறித்து கவுண்டம்பாளையம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுகுட்டி நக்கீரன் இணையதளத்திடம் பேசுகையில், 
 

தமிழகத்தின் கலாச்சாரப்படி ஒருவர் இறந்துவிட்டால் யாராக இருந்தாலும் எதிரியாக நினைக்கக்கூடாது. பக்கத்து வீட்டுக்காரராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி. அதிமுக சார்பில் முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர், அமைச்சர்கள் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். நாங்கள் யாரும் போகவில்லை. ஆனால் எங்களுக்கும் அதில் அனுதாபம் உண்டு. அதிமுக உருவாவதற்கு முன்பு கலைஞர் முக்கிய தலைவராக இருந்தவர். அந்த வகையில் கள்ளிமடையில் இளைஞர் அணி சார்பில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். என்னைப் பொறுத்தவரை இப்படித்தான் அரசியல் இருக்க வேண்டும். அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் கூட இதில் எந்த தவறும் இல்லை. எங்களை இங்கு திமுகவினர் யாரும் அணுகவில்லை. அப்படி அணுகியிருந்தால் நாங்களும் அஞ்சலி செலுத்தியிருப்போம் என்றார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆறுகுட்டி போல் வேறு எந்த குட்டியும் போகவில்லை; எல்லா குட்டிகளும் எங்களிடம் தான் உள்ளது” - எடப்பாடி பழனிசாமி

Published on 29/08/2022 | Edited on 29/08/2022

 

Edappadi Palaniswami talk about arukutty

 

திருச்சியில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் சிவபதியின் இல்ல திருமண விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

 

பின்னர் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் சென்ற அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். ஆகவே அந்த அறிக்கை குறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது. அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என ஓபிஎஸ் கூறியது, அவருடைய நிலைப்பாடு. சேர்ந்து செயல்பட வேண்டாம் என்பது தொண்டர்களுடைய நிலைப்பாடு. அதுவே என்னுடைய நிலைப்பாடும். பதவி ஆசை இல்லை என கூறும் ஓபிஎஸ், அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியது ஏன்?  எட்டு வழிச்சாலை பணிக்கு யார் ஆட்சியில் இருந்தாலும் நிலத்தை கையகப்படுத்தித்தான் சாலை அமைக்க வேண்டும். மாற்றுப்பாதை வழியாக சாலை அமைக்க வேண்டும் என்பது சாத்தியமில்லை. இத்திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின்  ஆட்சி இல்லாதபோது ஒரு பேச்சும், ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சும் பேசி வருகிறார். மாற்றி பேசுவது தான் திமுகவின் திராவிட மாடல்.

 

அதிமுக ஆட்சியில் தமிழகத்துக்கு பத்தாயிரம் கோடியில் வரவிருந்த எட்டு வழிச்சாலை திட்டத்தை தடுத்து நிறுத்திவிட்டு தற்போது அந்தத் திட்டம் வருவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவிக்கின்றனர். அதிமுக விவகாரத்தில் பாஜகவின் தலையீடு இல்லை. திருச்சி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் நிலத்தடி நீர்,  நீர் மேலாண்மை மற்றும் விவசாய தேவைக்காக அதிமுக ஆட்சியில் ரூ. 14,000 கோடியில் கொண்டுவரப்பட்ட காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை  முடங்கிக் கிடப்பது வருத்தம் அளிக்கிறது. எங்கள் மீது கோபம் இருந்தால் காட்டலாம் மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்களை புறக்கணிப்பது நியாயம் இல்லை. ஆறுகுட்டி போல் எந்த குட்டியும் செல்லவில்லை, எல்லா குட்டிகளும் எங்களிடம் தான் உள்ளது" என்றார்.

 

 

Next Story

"ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ் கட்சியில் இருந்து விலக வேண்டும்"- முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி அதிரடி! 

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

"OBS-EPS should resign" - Former MLA Sixth Action!

 

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று (16/06/2021) இரவு செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த போட்டியால் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகாரமானது. ஒற்றைத் தலைமை பிரச்சனையை உருவாக்கியவர்களை எடப்பாடி பழனிசாமி கண்டிக்க வேண்டும். பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரைக் கொண்டு வருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்" என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தார். 

 

ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு, அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் நான்காவது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த ஆலோசனையில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், ஆரணியில் இன்று நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துக் கொண்டுள்ளார். 

 

இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, "தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி சண்டையிட்டுக் கொள்வது சரியல்ல. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியைத் தொண்டர்களைக் கேட்டா ஏற்படுத்தினார்கள்? அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒதுங்க வேண்டும். பதவி விலகி புதியவர்களுக்கு வழிவிட வேண்டும். அ.தி.மு.க. தொண்டர்கள் தங்களுக்கு தேவையான தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸுக்கு பதிலாக வேறு யாராவது அ.தி.மு.க. பொதுச்செயலாளராக வந்தால் பரவாயில்லை. அ.தி.மு.க. பின்னடைவைச் சந்தித்துள்ள நேரத்தில் கோஷ்டி சேர்ந்துக் கொள்வது சரியல்ல. 

 

இப்படியே சென்றால் மீண்டும் பழையபடி கட்சி இரண்டாக உடையும் சூழல் ஏற்படும். எம்.ஜி.ஆர். காலத்தில் கட்சியில் இருந்த நிர்வாகிகளை நீக்குவதற்கு அதிகாரம் கொடுத்தது யார்? ஜெயலலிதா மட்டும் உயிருடன் இருந்திருந்தால் தற்போதைய நிலைமை வந்திருக்குமா? தொண்டர்கள் நொந்து நூலாகி போய் கிடக்கின்றனர். கட்சியை நன்றாகக் கொண்டு வருவார்கள் என்று நினைத்து தான் நாங்கள் ஒதுங்கி இருக்கிறோம். ஓ.பி.எஸும்- ஈ.பி.எஸும் கட்சியில் கோஷ்டி அரசியலை நடத்தி வருகின்றனர்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.