

Published on 22/04/2019 | Edited on 22/04/2019
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதியின்றி சென்ற பெண் அலுவலர் சம்பூரணம் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் போலீசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை இராணி மேரி கல்லூரியில் உள்ள வடசென்னை தொகுதியின் வாக்குப் பதிவு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை பாதுகாப்பு குறித்து சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு நடத்தினார்.