ரூபாய் 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஆணையர் கைது
வேலூர் வேலப்பாடியை சேர்ந்தவர் பாலாஜி (30). கான்டிராக்டர். கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக சுகாதார பணியாளர்களை அனுப்பினார். இதற்காக ரூ.10.23 லட்சம் வழங்க வேண்டும். 2 சதவீத கமிஷன் அடிப்படையில் ரூ.22 ஆயிரம் லஞ்சம் கேட்ட ஆணையாளர் குமார், இன்று 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ராஜா
ராஜா