Skip to main content

கரோனா பாதிப்பு உள்ளவரையிலும் ரேசன் கார்டுக்கு ரூ.15 ஆயிரம்! -அரசுக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல்!

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

கரோனோ பாதிப்பு இருக்கும் வரை அனைத்து ரேசன் கார்டுகளுக்கும், மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசு பல்வேறு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், கரோனா பாதிப்பைக் குறைக்க மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி,  வருகின்ற 22-ம் தேதி மக்கள் ஊரடங்கை அறிவித்துள்ளார்.

 

corono prevent action... new case on high court

 

இதுபோல், அலுவலகங்களில் பணிபுரிபவர்களும், வீடுகளிலேயே இருந்து வேலை செய்ய வேண்டுமென மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால், மக்கள் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே இருப்பதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும்  வருமான இழப்பீடு ஏற்பட வாய்ப்புள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில்,  கரோனா பாதிப்பில் இருந்து மாநிலத்தை முழுமையாக மீட்டெடுக்கும் நோக்குடன் ரூ.20 ஆயிரம் கோடி சிறப்பு நிதி திட்டத்தை அறிவித்துள்ளது. அதுபோல், கரோனா பாதிப்பு இருக்கும் வரை தமிழக அரசும், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும்  மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் , கரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான கிருமி நாசினி மற்றும் சோப் ஆகியவற்றை நேரடியாக வீடுகளுக்குக் கொண்டுவந்து டோர் டெலிவரி செய்ய உத்தரவிடக்கோரியும் சென்னை சேத்துப்பட்டுவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் உமாபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்