Skip to main content

''கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது''- ராதாகிருஷ்ணன் பேட்டி!

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

'' Corona vulnerability is likely to increase '' - Radhakrishnan interview!

 

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் சற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தமிழக அரசு என்றுமே மாஸ்க் கட்டாயம் இல்லை என்ற கருத்தை வெளியிடவில்லை. ஆனால் அதுபோன்ற தவறான புரிதல் இங்கு உள்ளது. யாருக்காவது அறிகுறி இருந்தால் 100 சதவிகிதம் டெஸ்ட் பண்ண சொல்லிருக்கிறோம். அதேபோல் முதல்வரும் கரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.  

 

14 ஆயிரம் என்று இருந்த பரிசோதனை எண்ணிக்கை இன்று 18 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதையும் படிப்படியாக அதிகரித்து 25 ஆயிரம் என்ற அளவிற்கு பரிசோதனை செய்ய சொல்லியுள்ளோம். மாவட்ட ஆட்சியர்களுக்கு 6 முக்கிய அறிவுறுத்தல்களைக் கொடுத்துள்ளோம். பொது இடத்தில் மாஸ்க் அணிய வேண்டும், தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும், மருத்துவ ரீதியாக தயாராக இருக்க வேண்டும், ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்டிங்கை அதிகரிக்க வேண்டும், பொதுமக்களுக்கு பழக்கங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும். கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 என இருந்த நிலையில் சென்னை ஐஐடியில் மட்டும் ஒரே நாளில் 12 பேருக்கு கரோனா என்றால் படிப்படியாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க கண்டிப்பாக வாய்ப்பு உண்டு. ஆனால் இது பதற்றப்பட வேண்டிய செய்தி அல்ல. மாஸ்க் போடுவது, கைகளை நன்கு கழுவுவது, தள்ளிநிற்பது போன்றவற்றை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்'' என்றார்.   

 

 

சார்ந்த செய்திகள்