கரோனா வைரஸ் அச்சுறுத்தால் உலகத்தையே மிரள வைத்துள்ளது. எல்லோருக்கும் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது கள்ள மதுபாட்டிகள் விற்பனையில் இருக்கின்றன என்கிற குற்றசாட்டு எழுந்துள்ளது. கள்ளசாரயம் விற்க தடையாக இருக்கும் மளிகைக்கடைகளையும் மூடும் வேலையில் முசிறி போலீஸ் ஈடுபட்டு வருகின்றனர். முசிறி தாபேட்டை பைபாஸ் பூங்கா அருகே உள்ள சிறு மளிகை கடையை அடைக்க காவல்துறை அதி தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆனால் ஒரு பாட்டிலுக்கு 50 ரூபாய் அதிகம் விலை வைத்து களை கட்டிவருகின்றது கள்ள மதுவிற்பனை. இந்த இடத்தில் வந்து குடிமகன்கள் பாட்டில்களை வாங்கிச்செல்கின்றனர். பெரம்பலூர், திருவாளந்துறை, அயன்புதூர், எள்ளுவாடி ஆகிய பகுதிகளில் ஏற்கனவே காவல்துறையினருக்கு தெரிந்தே கிராமம் தோறும் கள்ள மதுபாட்டில்கள் விற்பனை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. இந்த மது விற்பனையின் போது மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்கிறார்கள். காவல்துறையினர் ரவுண்ஸ் கூட போவதில்லை. இவர்கள் எல்லோரும் சென்னையில் பெரிய ஓட்டல்களில் வேலை செய்தவர்கள், கரோனோ வைரஸ் பிரச்சனையில் சொந்தவூருக்கு வந்தவர்கள் என்பதால் இவர்கள் அலப்பறை அதிகரித்து வருகிறது என்கிறார்கள் பொதுமக்கள்.