Skip to main content

கரோனோ எதிரொலி – கைது, வழக்கு, குண்டாஸ் அதிரடி காட்டும் தமிழக போலீஸ்!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

 

கரோனோ வைரஸ் அச்சுறுத்திலில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி ஜாலியாக உலா வந்தவர்கள், மீது கைது வழக்கு, குண்டாஸ் என தமிழக போலிஸ் செம கெத்து காட்டி வருகிறார்கள். 
 

கரோனோ வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் தனித்து இருக்க வேண்டும் எனவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. 
 

பிரதமர் மோடி இன்னும் ஒரு படி மேலே போய் நாட்டின் பொருளாதரம் வீ்ழ்ந்தால் பிரச்சனை இல்லை, உங்கள் உயிர் தான் முக்கியம் என 21 நாள் ஊரடங்கு உத்தரவு போட்டு கடுமை காட்டினார். 

 

இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் தவிர அனைத்துக் கடைகளும், அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. அவசியம் ஏற்பட்டால் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் தேவையான பொருட்கள் வாங்க வெளியே செல்லலாம் அவசியமின்றி சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறையினர் சார்பில் கடுமையான எச்சரிக்கைகள் விடப்பட்டது. 

 

police



இந்நிலையில் முதல் நாளான ஊரடங்கு உத்தரவு நாளில் பொதுமக்கள் பல இடங்களில் எச்சரித்து அனுப்பப்பட்டனர், பல இடங்களில் கண்டபடி திரிந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பலர் அடித்து விரட்டப்பட்டனர். பலர் சாலைகளில் தோப்புக்கரணம் போட வைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 

ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் ஊரடங்குச் சட்டத்தை அலட்சியப்படுத்தி சுற்றிய ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
 

இரண்டாவது நாளான இன்று திருச்சியில் ஏகப்பட்டவர்கள் டூவிலர், கார்களில் வெளியே சுற்ற ஆரம்பித்திருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

இதனால் போலீசார் உடனே களத்தில் இறங்கி ஹெல்மேட், இன்சுரன்ஸ், என ஆவணங்களையும் சோதனை செய்து வழக்கு போட ஆரம்பித்தினர். குறிப்பாக திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் 100க்கும் மேற்பட்ட கார்கள், டூவிலர்கள் தொடர்ச்சியாக வருவதை பார்த்த போலிஸ் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்று வழக்கு, கைது, என அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றனர். 
 

திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இதுவரை ஊரடங்கு விதிகளை பின்பற்றாத 1289 பேர் கைது செய்யப்பட்டனர். 802 இருசக்கர வாகனங்கள், 22 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல்.
 

கரோனா குறித்து பீதியைக் கிளப்பியதாக 12 வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டனர். கரோனா தொற்று அறிகுறியுடன் வீட்டுத் தனிமையில் இல்லாமல் சுற்றிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
 

கடந்த 22-ம் தேதி துபாயில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு வந்த 24 வயதுடைய ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்துதல் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்