Skip to main content

"579 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்"- ஈரோடு மாவட்ட ஆட்சியர் தகவல்!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

"Corona Vaccination Camp at 579 Places" - Erode District Collector Information!

 

தி.மு.க. அரசு அமைந்ததைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கரோனா தாக்கத்தைக் குறைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 12- ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாகச்  செப்டம்பர் 19- ஆம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த நிலையில் மூன்றாவது கட்டமாக நாளை (26/09/2021) மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தலைமையில் நடைபெற்றது.

 

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி, "கரோனாவை கட்டுப்படுத்த செப்.12 மற்றும் செப். 19- ல் இரண்டு கட்டமாகத் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்தது. மூன்றாம் கட்டமாக நாளை (26/09/2021) ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து, 579 இடங்களில் இந்த முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள், பஞ்சாயத்துச் செயலர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கொண்ட குழு அமைத்து தடுப்பூசி முகாம் அமைந்துள்ள ஒவ்வொரு இடங்களிலும் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து, ஒவ்வொரு மையத்திலும் தலா 200 பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், டேட்டாவை பதிவு செய்ய கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்துவதோடு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும். இது தவிர, தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் உள்ள இடங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும்  தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்டு முயற்சியாகச் செயல்பட வேண்டும்" என்றார்.


 

சார்ந்த செய்திகள்