Skip to main content

அரிசி மூட்டைகளை சுமந்த வட்டாட்சியர்!(படங்கள்)

Published on 06/04/2020 | Edited on 06/04/2020
k

 

கரோனாவால் ஊரடங்கு உத்தரவு  அமல்படுத்தப்பட்டு இருப்பதால், கோவையில் உணவின்றி தவிக்கும் வட இந்தியர்கள், சாலைகளில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு  சமுதாய கூடம் அமைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணிமுதல் இரவு 7 மணி வரை உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

 

k


அரசின் உணவளிக்கும் இந்த முயற்சிக்கு ஆதரவாக கோவை கனரக லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக 750 கிலோ அரிசியும், இதே போல ஆம்னி உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா அசோசியேஷன் 750 கிலோ அரிசியும், கோவை மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் 2250 கிலோ அரிசியை மாவட்ட ஆட்சித்தலைவர்  ராசாமணியிடம் வழங்கினர். 

இந்த அரிசி மூட்டைகள் வடக்கு வட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

 

k

 

அரிசி மூட்டைகளை இறக்கி வைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது,  வடக்கு வட்டாட்சியர் மகேஷ்குமார் அரிசி மூட்டைகளை தோளில் சுமக்க ஆரம்பித்து விட்டார்.

 

k

 

எல்லோரும் அவரை ஆச்சரியமாய்ப் பார்க்க,  ’’அரிசி மூட்டைகளை சுமப்பதால் சீக்கிரம் வேலை முடியுமே தவிர, இதனால் எனக்கொன்றும் இழுக்கு இல்லை. 

நமக்கு மக்கள் தான் முக்கியம்' என்ற அவரை ஆச்சரியமாய் பார்த்தார்கள் பொதுமக்கள்.

 

சார்ந்த செய்திகள்