Published on 26/01/2019 | Edited on 26/01/2019

அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு சென்றுள்ள தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் குடியரசு தினத்தை முன்னிட்டு வீடியோவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். லஞ்சம் இல்லாத ஆட்சி, யாருக்கும் அஞ்சாத நீதி, நேர்மையான தேர்தல், மக்களோடு இணைந்து உருவாக்குவோம். முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். நன்றி வணக்கம் என தெரிவித்துள்ளார். தற்போது இணையத்தில் இந்த காணொளி அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்த காணொளி அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.