Skip to main content

நல்லக்கண்ணு ஐயாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய கம்யூனிஸ்ட் கட்சியினர்

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

Communist Party Celebrates senior leader Nallakannu's Birthday

 

இந்திய கம்யூனிஸ்ட கட்சியின் அமைப்பு தினத்தை முன்னிட்டும், இந்திய கம்யூனிஸ்ட கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு ஐயாவின் 97ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டும் மங்களூர் ஒன்றியத்தில் உள்ள கட்சி கிளைகளில் கொடியேற்று விழா நடைபெற்றது.

 

மேலும் ராமநத்தம் காந்தி நகரில் கிளைச்செயலாளர் பி.பொன்னுசாமி தலைமையிலும், ஆவினங்குடியில் ஒன்றிய துணைச்செயலாளர் ஆர்.சக்திவேல் தலைமையிலும், கோடங்குடியில் எம்.பெரியசாமி தலைமையிலும், இடைச்செருவாயில் கிளைச்செயலாளர் பி.கோவிந்தன் தலைமையிலும், ஈ.கீரனூரில் கிளைச்செயலாளர் சிவப்பிரகாசம் தலைமையிலும், கச்சிமயிலூரில் கிளைச்செயலாளர் எஸ்.ராமலிங்கம் தலைமையிலும் நடைபெற்றது.

 

Communist Party Celebrates senior leader Nallakannu's Birthday

 

இதில் ஒன்றிய பொறுப்பு செயலாளர் ஆர்.சுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வி.பி.முருகையன், பி.ராமசாமி, எம்.சிலம்பரசன் மற்றும் குமார், ராஜ்குமார், மாயவன்,மாரி, ரஜினி, சின்னத்தம்பி, குப்புசாமி, வெங்கடேசன், ஜி.முருகன், கே.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்