நாடு முழுவதும் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திருத்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதுவரை இந்த போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கி சூட்டில் 20 பேருக்கு மேல் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, மேற்குவங்கம், இந்திய தலைநகரம் டெல்லி, காஷ்மீா் உட்பட சில மாநிலங்களில் முற்றிலும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளன.
இந்த போராட்டங்கள் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், எந்த பிரச்சனைக்கும் தீர்வுகாண வன்முறை மற்றும் கலவரம் வழி ஆகிவிடக்விடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில்கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்பொழுது நடந்துக்கொண்டுயிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு வேதனை அளிக்கிறது என கருத்து வெளியிட்டிருந்தார்.
இது தமிழக மக்களிடையே குறிப்பாக இஸ்லாமியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாங்கள் நடத்தும் உரிமைப்போராட்டம் வன்முறையா என்கிற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக பலரும் எதிர்கருத்து கூறிவருகின்றனர். சமூக வளைத்தளங்களில் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் பலதரப்பினரும். இது ரஜினி ரசிகர்களின் ஒருப்பகுதியினரை கூட அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.
ரஜினி இஸ்லாமியர்களின் நண்பர் தான், அவர்களுடன் எப்போதும் அவர் துணை நிற்பார் என்பதை மக்களுக்கு காட்டுவதற்காக ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை நகரில் உள்ள பழமை வாய்ந்த தர்காவில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர் கூட்டு பிரார்த்தனை நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தனர்/.
டிசம்பர் 24ந்தேதி ராணிப்பேட்டை யில் உள்ள ஹஜ்ரத் நாசர் அவுலியா என்கிற பழமையான பள்ளிவாசலில் மாவட்ட துணை செயலாளர் முகமதுகலீபா ஏற்பாட்டில் ரஜினியின் ஈடயிணைற்ற தொலைநோக்கு சிந்தனைகள் வெற்றி பெற சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில், இணை செயலாளர் நீதி என்கிற அருணாச்சலம் உட்பட ராணிப்பேட்டை, வாலாஜா நகரங்களின் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
பள்ளிவாசலுக்கு மதியம் தொழுகைக்கு வந்துயிருந்த இஸ்லாமியர்களோடு இணைந்து ரஜினி மக்கள் மன்றத்தினரும், மண்டியிட்டு சிறப்பு தொழுகையும், பின்னர் பிரார்த்தனையும் செய்தனர்.