சீனா, பாகிஸ்தான் கொடியை எரிக்க முயன்றதால் கைது
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. நேற்று காலை கேரளா மாநிலம் மற்றும் கன்னியாகுமரியில் தேசிய கொடியுடன் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்ற பாஜ, இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து கோபி பேருந்து நிலையத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் பாகிஸ்தான், சீனா கொடியை எரிக்க முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த சீனா, பாகிஸ்தான் கொடிகளை பறிமுதல் செய்தனர்.