Skip to main content

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'ரோட்டா வைரஸ்'

Published on 20/09/2017 | Edited on 20/09/2017
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'ரோட்டா வைரஸ்' 

தமிழகத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு நடக்கிறது. இதற்கு காரணம் 'ரோட்டா வைரஸ்'தான். இந்த வைரசை மழைக் காலத்தில் போலியோ சொட்டு மருந்துபோல ஒரே நேரத்தில் வழங்கினால் அழிக்க முடியும். இதனால் ரோட்டா வைரஸ் சொட்டு மருந்தை செப்.7ம் தேதி காலை 7:00 மணி முதல் கொடுக்க சுகாதாரத்துறை திட்டமிட்டது. 

செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த மருந்துகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து கோவை அரசு பொது சுகதாரதுறையினர் கூறுகையில்: கோவை மாவட்டத்தில் 420 மையங்களில்  இம்மருந்து வழங்க படும். ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு 6,10,14 வாரங்களில் ஏனைய தடுப்பு மருந்தோடு கொடுக்கவேண்டும். மேலும் இந்த தடுப்பு மருந்து வயிற்று போக்கினால் ஏற்படும் உயிர் இழப்பு தடுக்க முடியும். இதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. அவதுாறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இன்று கோவையில் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார்.

அருள்குமார்

சார்ந்த செய்திகள்