உபி குழந்தைகள் மரணம்: யோகிக்கு எதிராக சென்னை பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்!
சென்னை பல்கலைகழகத்தின் அம்பேத்கர் மற்றும் பெரியார் படிப்பு வட்டம் சார்பில், உத்தரபிரதேச மாநிலத்தில் அரசின் அலட்சியத்தால் குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவமனையில், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாத காரணத்தால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிந்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி மற்றும் பாஜக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், இதில் கலந்துகொண்ட மாணவர்கள் மரணமடைந்த குழந்தைகளுக்காக நினைவேந்தல் நிகழ்வை நடத்தினர்.
- சி. ஜீவாபாராதி