Published on 14/05/2018 | Edited on 14/05/2018

சேலத்தில் இருந்து திருப்பதி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் முதல்வரின் கார் கிளம்பிய போது, 10 பெண்கள் காரை மறித்து மனு கொடுக்க முயன்றனர். பாதுகாவலர்கள் பெண்களை தடுத்து நிறுத்தி மனுவை பெற்றுச் சென்றனர்.

இதுகுறித்து மனு கொடுத்த பெண்கள், ஓசூர் அருகே உள்ள சானசந்திரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 5 பேரை, சந்தன கட்டை கடத்தல் வழக்கு தொடர்பாக ஹட்கோ போலீஸார் அழைத்துச் சென்று துன்புறுத்துவதாகவும், அவர்களை உடனடியாக விடுவிக்க கோரி மனு அளித்ததாகவும் தெரிவித்தனர்.