Skip to main content

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நூல் வெளியிட்டு விழா- ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

Chief Minister MK Stalin's book launching ceremony - O. Panneerselvam - Edappadi Palanisamy invited!

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுய சரிதையான, 'உங்களின் ஒருவன்' என்ற புத்தகத்தின் முதல் பாகம் வெளியிடப்பட உள்ளது. 

 

வரும் பிப்ரவரி 28- ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெறும் விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி வெளியிடுகிறார். 

 

சென்னை நந்தனத்தில் உள்ள வர்த்தக மையத்தில் பிப்ரவரி 28- ஆம் தேதி அன்று பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெறும் விழாவில் முதலமைச்சர் ஏற்புரையாற்ற உள்ளார். தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தி.மு.க.வின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி வரவேற்புரை ஆற்றுகிறார். 

 

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் பங்கேற்க அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தி.மு.க.வின் தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார். 

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லக்கண்ணு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் நடிகர்கள் சரத்குமார், சிவக்குமார், ரஜினிகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்