சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்: 3 கிலோ போதைப் பொருள் பறிமுதல்
சென்ட்ரலில் இருந்து வட மாநிலத்துக்கு செல்லும் ரயிலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து டெல்லி செல்லும் ரயிலில் போதைப் பொருள் தடுப்புத் துறையினர் சோதனை நடத்தினர். மிசோராம் மாநிலத்தை சேர்ந்த விஷால் என்பவரின் பையை சோதனையிட்டதில், அதில் கோகைன் எனப்படும் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 3 கிலோ எடையுள்ள இந்தப் போதைப் பொருளின் மதிப்பு 10 கோடி ரூபாயாகும். விஷாலை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.