Skip to main content

அரசு பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்... சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்... செங்கல்பட்டில் பரபரப்பு...!

Published on 27/01/2020 | Edited on 27/01/2020

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசு பேருந்து நேற்று  இரவு புறப்பட்டுச் சென்றது. இந்த பேருந்து செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை வந்தடைந்த போது, சுங்கச்சாவடி ஊழியர் அரசு பேருந்து ஓட்டுநரிடம் சுங்கக் கட்டணம் கேட்டுள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் இது கைகலப்பாக மாறியது. 

 

toll gate

 



இந்த பிரச்சனையால் பரனூர் சுங்கச்சாவடியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்தில் வெகு நேரம் காத்திருந்த பயணிகள் சுங்கச்சாவடி ஊழியர்களின் செயலால் ஆத்திரமடைந்து,  சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

பின்னர் திருநெல்வேலியை சேர்ந்த ஓட்டுநர் நாராயணன் மற்றும் நடத்துனர் பசும்பொன் முடியரசு ஆகியோரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து ஓட்டுநரை தாக்கிய ராஜஸ்தானை சேர்ந்த குல்தீப், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த விகாஸ் குப்தா, சுங்கச்சாவடி ஊழியர் முத்து ரவி உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.   
 

சார்ந்த செய்திகள்