வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (11.06.2021) காலை அறிவித்திருந்தது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஒடிசா அருகே கடந்து செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட நிலையே நிலவும். சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் வங்க கடல் பகுதிக்கு மூன்று நாட்கள் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.