சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொள்ளையில் ஈடுபட்ட காவலர் 3 பேர் கைது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் காத்திருப்பு அறையில் தங்கியிருந்த பீகார் பயணியை தாக்கி தமிழ்நாடு சிறப்பு படை காவலர்கள் பணத்தையும் செல்போனையும் கொள்ளையடித்து உள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பீகார் பயணி பீரெந்திர ரெட்டி ரயில்வே போலீசிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ரயில்வே ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் வழிப்பறியில் ஈடுபட்ட தமிழக சிறப்பு படை காவலர்கள் மூன்று பேரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட காவலர்கள் இருதயராஜ், அருள்தாஸ் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டிய போலீசாரே இதுபோன்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.