Skip to main content

மத்திய சிறையில் செல்போன்...3 பேரிடம் விசாரணை... 4 செல்போன்கள் பறிமுதல்!

Published on 15/01/2020 | Edited on 15/01/2020

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 500 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்நிலையில் சிறையில் இருந்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் செல்போன் மூலம் வெளியில் உள்ள குற்றவாளிகளிடம் பேசி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 

cellphones seized in pondicherry central jail

 

 

இதனையடுத்து  காலாப்பட்டு மத்திய சிறையில், சிறை கண்காணிப்பாளர் கோபிநாத் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். யார்டு -1, யார்டு-2 அறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை மேற்கொண்டபோது விக்னேஷ், சத்யராஜ் மற்றும் தமிழ் ஆகிய மூன்று பேர் செல்போன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து 4 செல்போன் மற்றும் சார்ஜர்கள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவர்கள் மீது சிறை அதிகாரி காலாப்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரின் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

 

 

சார்ந்த செய்திகள்