கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் இரண்டு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் காவிரி நீர் அளவு 47,449 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து விநாடிக்கு 29,970 கனஅடியும், கபினி அணையிலிருந்து விநாடிக்கு 17,479 கனஅடியும் நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து விநாடிக்கு 65,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக குறைந்தது.
இதனால் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று (24/09/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 70,000 கனஅடியில் இருந்து 49,000 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 95.27 அடியாக இருந்த நிலையில் 98.20 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், அணையின் நீர் இருப்பு 62.53 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 18,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 850 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது.