சுகேஷ் ஜாமின் வழக்கு ஜன.9க்கு ஒத்திவைப்பு
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து தொடர்ந்து ஜாமின் கோரிய சுகேஷின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மாவட்ட நீதிமன்றம் 3 முறையும், டெல்லி உயர்நீதிமன்றம் 3 முறையும் சுகேஷின் ஜாமின் மனுவை நிராகரித்துள்ளன.
இந்நிலையில் தற்போது சுகேஷ் சந்திரசேகர் ஜாமின் மனு மீதான விசாரணையை ஜனவரி 9-க்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.