Skip to main content

செய்தித்தாள்களுக்கு விலக்களித்த உத்தரவுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020

கரோனா அச்சுறுத்தல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில், செய்தித்தாள்களுக்கு விலக்களித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு, ஊரடங்கு காலத்தில் செய்தித்தாள்களுக்கு விலக்கு அளித்துள்ளது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், செய்தித்தாள் நிறுவனங்கள், இணையதளங்கள் மூலமாக செய்திகளை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரி, சென்னையைச் சேர்ந்த கணேசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

Case dismissed for injunctive order for newspapers!

 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, காகிதத்தில் கரோனா வைரஸ் 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும் என்பதால், செய்தித்தாள்களுக்கு விலக்களித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
 

nakkheeran app



இந்த வாதத்திற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசுத்தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ஆரம்பகட்ட ஆய்வுகளில் செய்தித்தாள் மூலமாக கரோனா பரவுவதாகக்  கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட  நீதிபதிகள், நீதிமன்ற வழக்கு கோப்புகள் அனைத்தும் காகிதத்தில்தான் உள்ளன. பணம்கூட காகிதம்தான்.  இதையெல்லாம் அனைத்து மக்களும் பயன்படுத்திவரும் நிலையில், காகிதம் மூலம் கரோனா பரவலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்